Status - 419
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும்
நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே.
பொருள்:
நம்மை கண்காணிப்பவர்கள் இல்லை என்ற தைரியத்தில் தவறு செய்பவர்கள் அநேகர். அது மனித இயல்பு. உண்மையில் நம்மை கண்காணிக்கும் இறைவன் இல்லாத இடமே இல்லை. அழ்ந்த விழிப்புணர்வுடன் பார்த்தால் கண்காணிப்பவர் எங்கும் இருப்பது உணர முடியும். அவ்வாறு உணர்ந்த பின்னர் தங்களிடம் இருக்கும் தவறுகளை விட்டுவிடுவார்கள் மனிதர்கள்.
- திருமந்திரம் 2067
அப்படி உணர்ந்து திருந்தினால் நல்ல விஷயம் தான். இல்லையேல் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்! என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது
Victory King (VK)
No comments:
Post a Comment