Status 443
விவேகானந்தர் அமெரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இரண்டு ஐரோப்பியர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்த ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில் கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...' என்று கூறினான். இதை கேட்ட, விவேகானந்தர் ‘அவை இரண்டிற்கும் இடையிலே தான், நான் அமர்ந்திருக்கிறேன்...’ என்று ஆங்கிலத்தில் கூறினார். இதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் அவமானத்தால் தலை குனிந்தனர்.
விவேகானந்தர் வாழ்க்கையில் இருந்து!
ஒருவருக்கு அகந்தை தலைக்கேறி விட்டால் கண்களும் காதுகளும் செயலிழந்து நாவினால் தப்புத் தாளங்கள் போட்டு ஒரு நிலையில் மற்றவர்கள் மத்தியில் மதிப்பிழந்து மானமிழந்து தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நிலை தான் வரும். உணர்ந்தால் உண்டு நல்வாழ்வு!
Victory King(VK)
No comments:
Post a Comment