Thursday, January 8, 2026

#Victory King: நம் மதிப்பு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2434🥰  

நாம் மற்றவர்களுக்காக நம் சுபாவத்தை மாற்றிக் கொண்டே இருந்தால் மதிப்பை இழப்போம் மரியாதையை இழப்போம் சமுதாயத்தில் அந்தஸ்த்தையும் இழக்க நேரிடும். பச்சோந்தி கூட தம் உணவிற்காக மட்டுமே நிறத்தை மாற்றிக் கொள்ளும். ஆனால் குரோதம் உள்ள மனிதர்கள் நம்மை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். எனவே நம் அன்பையும் பண்பையும் பாசத்தையும் நாம் மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ளாத வரை நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Wednesday, January 7, 2026

#Victory King: உண்மையான வசந்தம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2433🥰

யார் ஒருவரால்  அன்பையும் பாசத்தையும் நினைத்து ஏங்கி மகிழ்வதையும், அதனை கிடைத்து இழந்த பிறகு நினைத்து மகிழ்வதையும் விடுத்து கிடைத்த அன்பையும் பாசத்தையும் தக்க வைத்து அனுபவித்து மகிழந்து வாழ முடிகிறதோ அவரால்தான் வாழ்க்கையின் உண்மையான வசந்தத்தை உணர முடியும்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, January 3, 2026

#Victory King: உதவி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2432🥰

ஒருவர் மனம் நொந்து விரக்தியில் இருக்கும் பொழுது நாம்  அவருக்கு ஆறுதல் சொல்லி நம்மால் முடிந்த உதவியை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, உபதேசம் என்ற பெயரில் அவரை மேலும் நோகடித்து அவருடைய கஷ்டத்திற்கு நாம் ஒரு உந்துவிசையாக இல்லாமல் இருந்தாலே போதும்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, January 1, 2026

#Victory King: சந்ததியினருக்கான சொத்து!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2431🥰

விலைமதிப்பில்லாத பொக்கிஷம் நாம் சேர்த்து வைக்கும் பொருளோ பொன்னோ அல்ல. பாசமுள்ள நம் குடும்பமும், அன்புடன் நம்மை அரவணைக்கும் உற்றார் உறவினர்களும்தான். இத்தகைய அரிய பொக்கிஷத்தை நாம் அழியாமல் தக்க வைத்தாலே போதும். அதுதான் நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் விலைமதிப்பில்லாத சொத்து.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏