Friday, September 27, 2024

#Victory King: குடும்பம் எனும் குருவிக்கூடு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2229🥰

குடும்பம் என்பது அன்பு  மகிழ்ச்சி பாசம் அமைதி அனைத்தும் அமைந்து அதன் அதிர்வுகளின் ஆனந்த கீதத்தில்  நம் இதயத்தை இதமாக்கி தேவையற்ற கோபத்தினால் அந்த மகிழ்ச்சி எனும் மாபெரும் சக்தியை இழக்காமல் தக்க வைத்து உறவுகளோடு இணைந்து குடும்பம் எனும் குருவிக் கூட்டை கலைக்காமல் பாதுகாப்போமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: மெளனமே ஆயுதம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2228🥰

நம் பயம் எதிரிக்கு தைரியம். நம் அமைதி அவனுக்கு குழப்பம். குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை.எனவே எதிரிகளிடம் எதையும் பேசி புரிய வைப்பதோ அவனுக்கு நிகராக நின்று வாக்குவாதம் செய்வதோ நம் மதிப்பிற்கு தான் கேடு. மௌனமாய் இருந்து சாதிப்பது தான் நம் சாமர்த்தியம்.உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, September 23, 2024

#Victory King: Over Confidence

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2227🥰

"Over Confidence" : நாம் நம் குழந்தைகளை அன்போடும் அரவணைத்தும் பரிவோடும் பாசத்தோடும் வளர்க்கலாம். ஆனால் அவர்களுக்கு அதீத நம்பிக்கையை கொடுத்து எந்த நிலையிலும் அவர்களை தட்டிக் கேட்க முடியாமல் அவர்கள் தடம் மாறி செல்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. அதீத நம்பிக்கை தன்னிலையை மறக்க செய்துவிடும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Sunday, September 22, 2024

#Victory King: புத்திசாலித்தனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2226🥰

உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். அதன் பிறகு பேசாமலேயே இருப்பதும், அந்தப் பிரச்சனையை ப் பற்றி பேசிப் பேசியே ஊதி ஊதி பெரிதுபடுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து விடாமல்  அதை முறையாக, சுமூகமாக பேசி உறவுகளை தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Friday, September 20, 2024

#Victory King: வாழ்க்கையும் வெற்றியும் சிந்தனையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2225🥰

நாம் ஒரு செயலை சிந்தித்து செயல்படாமல் இருந்துவிட்டு பிறகு அதைப்பற்றி செய்திருக்கலாமோ என்று எண்ணுவதும், அந்த செயலை செய்து தோல்வியடைந்த நிலையில் அதை செய்யாதிருந்திருக்கலாமோ என்று எண்ணி வருந்தி குழம்பிக் கொண்டிருப்பதை விடுத்து , குழப்பத்தை நம் மனதில் இருந்து விலக்கி தீர்க்கமான முடிவுடன் எந்த செயலை செய்தாலும் அதில் நமக்கு வெற்றி தான்.  உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நுணலும் கெடுமே தன் வாயால்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2224🥰

யார் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு பொய்யாலேயே வாழ்க்கையை நடத்தி வருகிறார்களோ அவர்கள்தான் மற்றவர்கள் மீது தேவையற்ற வீண் பழிகளை சுமத்தி தங்களை உத்தமர் போல்  காட்டிக் கொள்வார்கள். இவர்களின் இத்தகைய உளறலே இவர்களது வாழ்க்கைக்கு உலை வைத்து விடும்."நுணலும் தன் வாயால் கெடும்". உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Tuesday, September 17, 2024

#Victory King: வாழப் பழகுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2223🥰

நமக்கான தேடலை நம்மால் மட்டுமே கண்டறிய முடியும். நமக்கான மாற்றத்தை நம்மால் மட்டுமே உருவாக்க முடியும். அதுபோல் நம் வாழ்க்கையில் எடுக்கும் எந்த முடிவையும் நாம் தான் எடுக்க வேண்டும். இதுதான் நான் என்று நம் இயல்பு மாறாமல் வாழப்பழகுவோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, September 16, 2024

#Victoy King: நம் வாழ்க்கை நம் கையில்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2222🥰

நம்மிடம் கொடுக்கப்பட்ட பாறையை நாம் செதுக்கி சிற்பமாக்கி அழகு பார்ப்பதும், அதை உடைத்து தூள் தூளாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அதுபோல்தான் இறைவன் நமக்கு அருளிய அறிவு ஆற்றல் திறமையை முறையாக பயன்படுத்தி நம் வாழ்க்கையை சொர்க்கமாக்குவதும், நம்மை நாமே புண்படுத்திக்கொண்டு நரகமாக்கிக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. சிந்திப்போமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நிதான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2221🥰

நம் பொறுமையும் அளவுக்கு மீறினால் நாம் முட்டாள். அன்பும் அளவுக்கு மீறினால் அடுத்தவர்கள் தவறுகளை நம் கண்கள் மறைத்து விடும். அளவுக்கு மீறி நமக்கு கிடைக்கும் புகழ்ச்சி நம் அழிவு பாதைக்கு வழிவகுக்கும். எனவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை மனதில் கொண்டு நாம் நிதானத்தை கடைப்பிடித்தால் நமது வாழ்க்கை சீராகவும் சிறப்பாக அமையும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, September 9, 2024

#Victory King: பெருமையும், உதவியும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2220🥰 

கஷ்ட காலத்தில் உதவாமல் பின்னாளில் வந்து ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என வாஞ்சையாக பேசுவது போல் நடிக்கும் உறவுகளிடமும், தன் ரத்த உறவுகளை பிறரிடம் கையேந்தவிட்டு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு தங்கள் பெருமைக்காக உதவி செய்யும் உறவுகளிடமும் நாம் நெருங்காதிருப்பதே மேல். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Friday, September 6, 2024

#Victory King: மனிதத்தன்மை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2219🥰 

பொய்யையே உண்மை போல் பேசி வாழ்பவர்கள் ஒரு நாள் அந்தப் பொய்யாலேயே அவர்கள் வாழ்க்கை அழிந்து போகும். அதுபோல் வன்மம் வைத்து பழிவாங்கும் எண்ணம் உடையவர்களுக்கு ஒரு நாள் அந்த வன்மம் தான் அவர்களுக்கு எமன். எனவே அன்பு காட்டி வாழ முடியாவிட்டாலும் மிருகத்தனமாக வாழ்வதை விடுத்து மனிதத் தன்மையோடாவது வாழலாமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நம் மதிப்பும், வாழ்க்கையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2218🥰

அரக்கனிடம் அன்பை எதிர் பாக்க முடியுமா? ஆணவக்காரனிடம் அனுசரணையை எதிர்பார்க்க முடியுமா? கயவரிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியுமா? பொய் பேசியே பிழைப்பு நடத்தவனிடம் உண்மையைச் சொல்லி புரிய வைக்க முடியுமா? கொலைகாரனிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா? இவற்றை எல்லாம் நாம் எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள். எனவே இவர்களிடமிருந்து காத தூரம் விலகி இருந்தால்தான் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2217🥰

அரிசி மாவில் அழகாக புள்ளி வைத்து அந்தப் புள்ளிகளை முறையாக கோடுகளால் இணைத்தால் கண்ணைக் கவரும் கோலம் வடிவமையும். அதுபோல்தான் நமது உறவினர்கள் அனைவரையும் அன்பு பாசம் என்ற கோட்டினால் இணைத்து கூடி உறவாடினால் அதில் உள்ள ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: வாழ்க்கையின் புத்திசாலித்தனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2216🥰

நாம் இறந்த பிறகு என்ன செய்வார்களோ எப்படி இருப்பார்களோ என்று மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து நாம் இருக்கும் பொழுதே அதற்கான காரணத்திற்கு சிந்தித்து செயல்பட்டு அதனை நிவர்த்தி செய்வதுதான் புத்திசாலித்தனம். கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே நம் மரணத்திற்கு முன்பே அதற்குப் பரிகாரம் காண முயல்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏