Tuesday, March 25, 2025

#Victory King: உழைப்போம் உயர்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2287🥰  

உழவர்கள் கடினமாக உழைத்தால் தான் நமக்கு உணவு.  அந்த உணவும் நாம் உழைத்து சம்பாதித்தால் மட்டுமே.அடுத்தவர்கள் தோளிலிலேயே அமர்ந்து  சொகுசுபயணம் செய்தே பழகியவர்கள் வாழ்க்கையின் சுமையை அறிய மாட்டார்கள். அவர்கள் கீழே விழும் பொழுது தான் தட்டு தடுமாறி தத்தளிபார்கள். எனவே நம் உழைப்பால் மட்டுமே முன்னேறி நம்மை நாம் உயர்த்தி கொள்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, March 23, 2025

#Victory King: ஏமாற்றங்களை தாங்கப் பழகுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2286🥰 

என்னதான் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் நமக்கு வலிக்கத்தான் செய்யும். உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் நாம் ஜெயித்து விடுவோம். ஆனால் அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கும் பொழுது நமக்கு ஏமாற்றம் தான்.எனவே தவிர்க்க முடியாத இத்தகைய ஏமாற்றங்களை தாங்கும் சக்தியை நாம் வளர்த்துக்கொண்டு வாழப் பழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, March 22, 2025

#Victory King: நேர்மையாக பழகப் பழகுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2285🥰 

ஒரு செயல் தவறு என்று தெரிந்தே நாம் அதை செய்யும்பொழுது அதற்கான தண்டனை கிடைக்காத சமயத்தில் ஒரு நிலையில் நாம் தவறே செய்யாத போது நமக்கு தண்டனை கிடைக்கும் பொழுதாவது நாம் செய்த தவறை உணர்ந்து திருந்த வேண்டும். அதுபோல் நாம் மற்றவரிடம் ஏமாறியது தவறு இல்லை. நம்மை ஏமாற்றும் அளவிற்கு நாம் அவர்களிடம் அன்பாகவும் உண்மையாகவும் பழகியது தான் தவறு என்பதை உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, March 21, 2025

#Victory King: கற்றுக் கொடுக்கும் காலம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2284🥰  

உள்ளொன்று வைத்து புறமொன்று நாவினால் தேனொழுக பேசி அடுத்தவர்களுக்கு ஒரு மாய பிம்பத்தை பிரகாசமாக சித்தரித்து இறுதியில் எதிராளியின் இதயத்தை இரணமாக்கும் விஷயத்தை தங்கள் மீது குற்றமில்லாத படி உரைக்கும் துரோகிகளை ஒரு நிலையில்"காலம்" கதறடிக்கும் என்றாலும் நம்மை நாம் காக்க அவர்களை இனம் கண்டு பழக முயல்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, March 20, 2025

#Victory King: நேர்மையும் வெற்றியும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2283🥰  

நாம் தோல்வி அடையும் பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்து விடாமல் அந்த தோல்விக்கு இடையில் வாய்ப்புகளும் மறைந்திருக்கும் என்று நம்பிக்கையோடு மாற்று பாதையை தேடி அடைந்த தோல்விக்கு தோல்வியை ஏற்படுத்தி நாம் நேர்மையாக ஆசைப்பட்டதை நிறைவேற்றி வெற்றி பெறுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, March 19, 2025

#Victory King: இதுவும் கடந்து போகும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2282🥰 

எந்த ஒரு நிகழ்வுமே நடந்து முடிந்து கடந்து போனதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு, நாம் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் புரிதல் இல்லாதவர்களிடம்  சொல்லியும் பிரயோஜனம் இல்லை என்பதை மனதில் கொண்டு மௌனமாய் இருந்து,  எதிர்காலமானது நம்மை ஏளனமாக பேசிய சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்டும் ஒரு வாய்ப்பாக கருதி  எதிர்காலத்தை சிறப்பாக்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, March 18, 2025

# Victory King: நேர்மை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2281🥰 

நேரத்தில் உண்ணாமை நம் உடலுக்கு கேடு. நேர்மையற்ற செயல் நம் வாழ்க்கைக்கு கேடு. அதுபோல் நம் எண்ணம் தூய்மையாக இருந்தும் செயல் நேர்மையாக இருந்தும் நாம் ஒருவரிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் முறையாக சொல்லவில்லை என்றால் அதுவே நம்மை பழிக்கு ஆளாக்கி பகைக்கு வித்திட்டு நம்மை மீளாத்துயரில் அழ்த்தி விடும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏