Status 170
ஜட வஸ்துக்களிடமும் மிருகங்களிடமும் நமக்கு இருக்கும் மனோபாவத்தை
மனிதர்களிடம் வைப்பது கடினமாகிறது. ஏனெனில்
அவைகளிடம் நாம் எந்த மாறுதலையும்
எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் அவற்றால் மாற முடியாது என்பது
நமக்குத் தெரியும். ஆனால் மனிதர்கள் மட்டும்
நம் சந்தோஷத்தின் பொருட்டு மாற வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம்.நம்மை சுற்றியுள்ள ஒவ்வொருவரும்
நமக்கு ஏற்ப மாற வேண்டும்
என்ற எதிர்பார்ப்பினால் நம் மனம் சதா
அமைதியின்றி இருக்கிறது.
-சுவாமி தயானந்த சரஸ்வதி
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது நம் மனம் லேசாக இருக்கும். அதற்கான பாராட்டை நாம் மற்றவரிடம் எதிர் பார்க்கும் பொழுது அது கிடைக்கவில்லை என்றால் நமக்கு மனம் அழுத்தம் ஏற்பட்டு பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் உதவி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை மேற்கொண்டால் அமைதியாக வாழலாம்.
-Victory king (VK)
No comments:
Post a Comment